சாலை வசதி கோரி நகராட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்

சாலை வசதி கோரி நகராட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-09 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி 9-வது வார்டு மாதவன் நகர் 3-வது வீதியில் சாலை அமைத்து தரக்கோரி ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பாக காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் என்ஜினீயர் அறையில் திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி மாநில துணை செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். உடனடியாக நகராட்சி என்ஜினீயர் கோவிந்தராஜன் சாலைக்கான களத்தை ஆய்வு செய்தார். அதன்பின் காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை நாளை (இன்று) அந்த சாலையை அமைப்பதற்கான வேலை தொடங்கும் என உத்தரவாதம் கொடுத்தார். அதன் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்