ஈரோட்டில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சலீம்பாஷா, செய்தி தொடர்பாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தலைமை நிலைய செயலாளர் சிறுத்தைச்செல்வன் கோரிக்கை குறித்து பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கழித்த சம்பவத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் மாவட்ட தொழிற்சங்க பொறுப்பாளர் கார்த்திக், மாநகர துணைச்செயலாளர் கவுதம் வள்ளுவன், இளம்புலிகள் மாநகர செயலாளர் அலெக்ஸ், மாணவர் அணி செயலாளர் பிரபு, கொள்கை பரப்பு செயலாளர் பூபதி வள்ளுவன், நிர்வாகிகள் நவீன், கதிரேசன், ஹரிஹரன், சதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.