ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.பழனிசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாவட்ட தலைவர்கள் கோபு, கையிலாசம், முன்னாள் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில ஊடகப்பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜோதி குமாரவேல் கலந்துகொண்டு பேசினார். இதில் கட்சியினர் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட துணைத்தலைவர் வினோத்குமார், மாவட்ட ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், நிர்வாகிகள் எல்.ஆறுமுகம், வி.கே.பி.ஆறுமுகம், சரஸ்வதி, தவசியம்மாள், இமானுவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.