போராட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி நாகையில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி நாகையில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
நாகை அவுரி திடலில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் சின்னத்துரை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும். இதனை அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட்டு கையில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம்
குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். காவிரியில் தமிழகத்துக்கு மாதவாரியாக தண்ணீர் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாரிமுத்து உள்பட விவசாய- விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.