ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் உலா வந்த காட்டு யானைகள்
ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் காட்டு யானைகள் உலா வந்தன.
செம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் ஆத்தூர் காமராஜர் அணை அமைந்துள்ளது. இந்த அணை பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அணையை ஒட்டியுள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் நேற்று முன்தினம் 5 யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து கன்னிவாடி வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதால் யானைகளை வனப்பகுதியில் விரட்டுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.