கல் குவாரிகளில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை- கனிமவளத்துறை இணை இயக்குனர்

கல்குவாரிகளில் விதிகளை மீறினால் மீண்டும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிம வளத்துறை இணை இயக்குனர் முருகானந்தம் எச்சரித்து உள்ளார்.

Update: 2022-10-06 19:11 GMT

நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் சிக்கி பலியானார்கள். இந்த சம்பவத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் அனைத்து கல்குவாரிகளும் மூடப்பட்டன. பின்னர் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தபோது கல்குவாரிகளில் விதிமீறல்கள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.300 கோடி வரை கல்குவாரிகளுக்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவு மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி தற்போது கல்குவாரிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. 14 குவாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நெல்லை மாவட்ட கனிம வளத்துறை இணை இயக்குனர் முருகானந்தம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகள் மீண்டும் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு கல்குவாரிகளை செயல்படுத்த வேண்டும். அரசு விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். அரசு வழிகாட்டுதல்படி கல்குவாரிகளில் திடீர் ஆய்வு நடத்தப்படும். அப்போது விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்