முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2023-03-10 18:45 GMT

பொள்ளாச்சி

நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆனைமலை, கோட்டூரில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அருண் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் எதுவும் நடக்க கூடாது என்று உத்தரவிட்டு உள்ளார்.

இதை தொடர்ந்து கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி ஆலோசனையின் பேரில் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள போலீஸ் திருமண மண்டபத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத்துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் பொறுப்பேற்ற பிறகு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது சம்பா, தாளடி நெல் பயிர்கள் அறுவடை நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகளிடம் இருந்து நெல்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளை நீண்ட நேரம் காக்க வைக்க கூடாது. கையூட்டு, முறைகேடு போன்றவை கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், துணை வேளாண்மை அலுவலர் இளங்கோவன், வட்ட வழங்கல் அலுவலர் காயத்ரி, ஆனைமலை பட்டியில் எழுத்தர் நெடுஞ்செழியன் மற்றும் சுற்று வட்டார விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்