அம்பாள் சப்பரத்தில் வீதி உலா
செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி அம்பாள் சப்பரத்தில் வீதி உலா நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகர நாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவானது கடந்த 26-ந்்தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்து வருகிறது. விழாவில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சுவாமி அம்பாள் சப்பரத்தில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.