தெருமுனை பிரசார கூட்டம்
பாளையங்கோட்டையில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை அருகே மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு வரிவிதிக்கும் பா.ஜனதா அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் ராஜதுரை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் தொடக்க உரையாற்றினார்.
கூட்டத்தில் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு வரி விதிக்ககூடாது. ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதை தடைசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.