மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் தெருமுனை பிரசாரம் தரகம்பட்டி அருகே உள்ள சேர்வைக்கார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடவூர் ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில குழு உறுப்பினர் பாலா, மாவட்ட செயலாளர் ஜோதிபாசு மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.