மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற பெயரில் தெருமுனை பிரசாரம் நொய்யல் அருகே குறுக்கு சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்றது. இதற்கு கட்சியின் கரூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.