தோகைமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெரு முனை பிரசாரம் நடந்தது. இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், கரூர் மாவட்ட பொது செயற்குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மத்திய அரசு அறிவித்த 2 கோடி பேருக்கு வேலை உறுதி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், விலைவாசி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தெருமுனை பிரசாரம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.