விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்

குடியாத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

Update: 2022-12-27 13:04 GMT

குடியாத்தம்

குடியாத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆரிய சனாதனங்களின் துரோகங்கள் விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் கு.விவேக் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பெ.வெங்கடேசன், சி.தமிழரசன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சி.ராஜேஷ் வரவேற்றார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் சிவ செல்ல பாண்டியன், பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த வக்கீல் சிவா, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் அன்பரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட சமூக நல்லிணக்க பேரவை அமைப்பாளர் குருவிகணேசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பா.வினோத்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்