கோத்தகிரியில் அருவிகளாக மாறிய நீரோடைகள்-சுற்றுலா பயணிகளை கவர்கிறது

கோத்தகிரியில் அருவிகளாக மாறிய நீரோடைகள்-சுற்றுலா பயணிகளை கவர்கிறது

Update: 2022-10-13 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதுடன், நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மழையின் காரணமாக ஆங்காங்கே புதிய நீழ்வீழ்ச்சிகள் தோன்றியுள்ளன. இதே போல நீரோடை நீர் பெருக்கெடுத்து பாறைகள் வழியாக ஓடி தாழ்வான பகுதிகளில் ஆர்ப்பரித்து கொட்டுவது நீர்வீழ்ச்சி போல காட்சியளித்து வருகிறது. இந்தநிலையில் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கொட்டகம்பையை இணைக்கும் சாலைக்கு மாற்றாக கொணவக்கரை வழியாக செல்லும் நேர்த்தியான சாலையோரத்தில் பாறைமேடு கிராமத்திற்கு அருகே நீரோடை நீர் அருவியாக கொட்டி வருவது காண்போரின் மனதைக் கவர்வதாக அமைந்துள்ளது. இதே போல கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மழையின் காரணமாக புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளன. இந்த நீர்வீழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகளும் கண்டுகளித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்