எஸ்.டி.ஆர். விஜயசீலன் பிறந்தநாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Update: 2023-02-09 18:45 GMT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா தலைவரும், எஸ்.டி.ஆர்.பள்ளி, எஸ்.டி.ஆர்.பாலிமர்ஸ், எஸ்.டி.ஆர்.டைல்ஸ், எஸ்.டி.ஆர்.என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவருமான எஸ்.டி.ஆர்.விஜயசீலனின் 50-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி கோரம்பள்ளம் எஸ்.டி.ஆர். பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் உள்ள விஜயசீலனின் தாத்தா சாமுவேல் நாடார், தந்தை எஸ்.தர்மராஜ் நாடார் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, விஜயசீலனின் 50-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 50 அடி நீளம் கொண்ட கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு தையல் எந்திரங்கள், வேட்டி, சேலை, மளிகைபொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது த.மா.கா. ஒரு குடும்ப உணர்வுடன் செயல்படும் இயக்கமாகும். உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் பெருந்தலைவர் காமராஜர் வழியில் மக்களுக்காக நாங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்கும் மக்கள் ஒருநாள் அங்கீகாரம் தருவார்கள். எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தொழில் அதிபராக, கல்வியாளராக, அரசியல்வாதியாக, அனைத்துதரப்பு மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் திறம்பட செயல்பட்டு வருகிறார். அவரது திறம்பட்ட பணி சிறக்க வாழ்த்துவதோடு அவரது பணிகளுக்கு நான் என்றும் துணையாக நிற்பேன். இவரைப்போன்று மற்ற மாவட்ட நிர்வாகிகளும் செயல்பட்டு த.மா.கா.வின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., உடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் ஜெகநாதராஜா, மாநில செயலாளர்கள் சார்லஸ், சரவணன், ஜிந்தா சுப்பிரமணியன், மாவட்ட தலைவர்கள் கதிர்வேல் (தூத்துக்குடி வடக்கு), சுத்தமல்லி முருகேசன் (நெல்லை) மாரிதுரை, காந்தி (மதுரை), செல்வம் (கன்னியாகுமரி), ராஜபாண்டியன் (விருதுநகர்), மாநில தொண்டரணி அயோத்தி, மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், காங்கிரஸ் நிர்வாகி பொன்பாண்டியன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், ஐ.என்.டி.யு.சி., பெருமாள்சாமி, தொழில்அதிபர்கள் வேல்சங்கர், விவேகம் ரமேஷ், டி.ஏ.தெய்வநாயகம், அபிராமி சந்திரசேகர், ரத்னா தர்மராஜ், சேசையா வில்லவராயர், அ.தி.மு.க வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகி ராஜேந்திரன், ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், சி.ஐ.டி.யு.ரசல், எஸ்.டி.ஆர்.பள்ளி செயலாளர் ஜெயம்மனோகர் பிரைட், முதல்வர் விஜயஸ்ரீவனிதா, துணை முதல்வர்கள் ஜெனிட்டாஅமலா, லிலோஷீலா, எஸ்.டி.ஆர் பாலிமர்ஸ் பொதுமேலாளர் கிறிஸ்டிஜெயபிரபா, மேலாளர்கள் பலவேசம், ஹரிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவுக்கு வந்தவர்களை எஸ்.டி.ஆர் குடும்பத்தினர் சார்பில் எஸ்.டி.ஆர்.பொன்சீலன், எஸ்.டி.ஆர்.சாமுவேல்ராஜ், அபிஷேக்பொன்சீலன், அஸ்வந்த்பொன்சீலன், அஜய்விஜயசீலன் மற்றும் குடும்பத்தினர்கள், எஸ்.டி.ஆர்.நிறுவனங்களின் ஊழியர்கள் வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்