எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து குமரியில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-07-19 20:56 GMT

நாகர்கோவில், 

நாடாளுமன்றத்தில் கருத்துரிமைக்கு மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்து குமரி மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வாயில் கருப்பு துணிகட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா முன்பு நடந்த ஆர்பாட்டத்திற்கு நாகர்கோவில் தொகுதி தலைவர் முகமது சுபேர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜாபர் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரபீக்அகமது, காஜா, வர்த்தக அணி தலைவர் ஷாகுல்அமீது உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

கன்னியாகுமரியில் முஸ்லிம் பள்ளிதெரு முன்பு வாயில் கருப்பு துணிகட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சலீம், ஹைதர் அலி, மைதீன், ஜாகீர் உசேன், சுலைமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திட்டுவிளை நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் திட்டுவிளை பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் திட்டுவிளை நகர தலைவர் ஷேக் மைதீன் தலைமை தாங்கினார் பூதப்பாண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் நவிலா, அசாருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கட்சி பொருளாளர் ஜஹாங்கிர் வரவேற்றார். இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா செயற்குழு உறுப்பினர் அன்சார் சிறப்புரையாற்றினார். முடிவில் காஜாமுகைதீன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்