எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2022-11-09 20:08 GMT

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் அக்கீம் தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் அபுபக்கர் சித்திக், மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி பாஷா, செயலாளர் சாகுல் அமீது, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரான கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் கோர்ட்டு நடவடிக்கைகளில் இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தஸ்தகீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்