எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சிம்னி விளக்கேந்தி மேலப்பாளையம் சந்தை முக்கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில தலைவர் சேக் அப்துல்லா கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மத்திய அரசின் அழுத்தத்தை காரணம் காட்டி 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்திய ஆளும் தி.மு.க. அரசு, தற்போது மீண்டும் மத்திய அரசின் அழுத்தத்தை காரணம் காட்டி மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் ஹயாத் முகம்மது, பொதுச்செயலாளர் பர்கிட் அலாவுதீன், மாவட்ட பொருளார் முகம்மது காசிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.