எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-24 20:20 GMT

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தஞ்சை பாரூக் ஆகிய நிர்வாகிகளின் வீட்டில் சோதனை செய்த என்.ஐ.ஏ.வை கண்டித்து அக்கட்சி சார்பில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் ஜூல்பிகர் அலி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி வரவேற்று பேசினார். எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் கனி, ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் நிஜாம், துணை செயலாளர் மணப்படை மணி, தி.மு.க. மாநகர் துணை செயலாளர் அப்துல்கையூம் காங்கிரஸ் நிர்வாகி ரசூல், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான் மைதீன், த.ம.ஜ.க. மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட செயலாளர் ஜமால், வக்கீல் ரமேஷ், மே 17 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புருசோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்