எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம்

பத்தமடையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-27 19:25 GMT

சேரன்மாதேவி:

நெல்லை புறநகர் மாவட்டம், அம்பை சட்டமன்ற தொகுதி சார்பில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சமூக ஊடக அணி ஆலோசனைக் கூட்டம் பத்தமடையில் நடைபெற்றது. அணி பொறுப்பாளர் எஸ்.பி.எம். கனி தலைமை தாங்கினார். கட்சியின் பத்தமடை நகர தலைவர் ஷரீப் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஏ. கனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். வரும் காலங்களில் பத்தமடை, சேரன்மாதேவி ஆகிய பகுதிகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் சரியாக வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதால், சிறுவர்கள், பெரியவர்கள் அச்சத்தோடு இருக்கிறார்கள். அதை தடுக்கும் விதமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அம்பை சட்டமன்ற தொகுதி சமூக ஊடக அணி பொறுப்பாளர் ஷேக் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்