எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேசிய பாதுகாப்பு முகமை என்ற என்.ஐ.ஏ. அமைப்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் சோதனை நடத்தியது. இதனை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமையில் ராமநாதபுரம் சந்தை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜெமிலுநிஷா, மாவட்ட துணை தலைவர்கள் சோமு, சுலைமான், பொருளாளர் அசன் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் நஜ்முதீன் வரவேற்றார். கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது கண்டன உரையாற்றினார். பெரியபட்டினம் நகர் தலைவர் பீர் முகைதீன் கண்டன கோஷம் எழுப்பினார். கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர் நிர்வாகிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஜமாத்தார்கள், குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் என்.ஐ.ஏ.வுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். மாவட்ட செயலாளர் ஆசாத் நன்றி கூறினார்.
அதேபோல் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட துணைதலைவர் மீரான் முகைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நூருல் அமீன், உமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் கன்சூல் மஹிரிபா, மாவட்ட பொருளாளர் ஹமீது சுல்தான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா முகமது, மாவட்ட பொதுச்செயலாளர் பஞ்சுபீர் முன்னிலை வகித்தனர். தொகுதி தலைவர் ரசீது கான் வரவேற்றார். மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில், மாவட்ட தொண்டரணி தலைவர் பஹிம், மாவட்ட செயலாளர் காஜா மொய்தின், முகமது ஆரிப், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் சுல்தான் நன்றி கூறினார்.