எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 26 பேர் கைது
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் விளைநிலங்களை பறித்து விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக போராடும் மக்களை சந்திக்க சென்ற எஸ்.டி.பி.ஐ. மாநில நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து திருச்சி பாலக்கரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டத்தலைவர் முபாரக்அலி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் நியமத்துல்லா முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் தமீம்அன்சாரி, துணைத்தலைவர் பிச்சைக்கனி உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்தும், போலீசாரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். போலீசாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 26 பேரை கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.