பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் மோக்கா புயல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பலத்த காற்று, மழை பெய்யக்கூடும். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த காட்சி. அதன் பின்னணியில் கடல் நடுவே உள்ள பாம்பன் ரோடு பாலம்.