பெருந்துறையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

பெருந்துறையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-10-10 21:49 GMT

பெருந்துறை

பெருந்துறை கொங்கு நகர் குடியிருப்பு பகுதியில், ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, அவைகள் பெருந்துறையில் உள்ள மளிகை கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார், கொங்கு நகர் பகுதியில் உள்ள அந்த வீட்டுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சக்தி சிவசுப்பிரமணியன் (வயது 39) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து சக்தி சிவசுப்பிரமணியனை போலீசார் கைது செய்ததுடன், அவருடைய வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் கூறுகையில், 'பெருந்துறை பகுதியில் உள்ள மளிகை கடைகள் மற்றும் பேக்கரிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை --செய்வது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த கடைகள் வருவாய்த்துறை மூலம் சீல் வைத்து மூட நடவடிக்கை எடுக்கப்படும்,' என எச்சரித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்