நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கம்

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்பட்டது

Update: 2022-09-04 17:19 GMT

சீ்ர்காழி அருகே காத்திருப்பு கன்டமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை, கதிராமங்கலம் வழியாக மயிலாடுதுறைக்கு அரசு பஸ் இயங்கி வந்தது. இந்த அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள், கிராம மக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து கிராம மக்கள், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். நிறுத்தப்பட்ட பஸ்சை மீ்ண்டும் இயக்க எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டார். இந்தநிலையில் காத்திருப்பு கிராமத்தில் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணி மணிமாறன் தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து, பஸ்சில் பயணம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் மகேந்திரகுமார், மயிலாடுதுறை கிளை மேலாளர் ராமமூர்த்தி, துணை மேலாளர் சிதம்பரநாதன், தி.மு.க. பிரமுகர் மோகன்ராஜ் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்