தேங்காய் சிரட்டை கரி தயாரிக்கும் பணி நிறுத்தம்

குஜிலியம்பாறை அருகே தேங்காய் சிரட்டை கரி தயாரிக்கும் பணியை நிறுத்தி தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2023-06-01 19:00 GMT


குஜிலியம்பாறை அருகே ஆலம்பாடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி தேங்காய் சிரட்டைகள் எரிக்கப்பட்டு அதில் இருந்து கரி தயாரிக்கும் பணி நடந்து வந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் மனு கொடுத்தனர். அந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி குஜிலியம்பாறை தாசில்தார் ரமேசுக்கு கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டார்.


அதன்பேரில் தேங்காய் சிரட்டை கரி தயாரிக்கும் இடத்தை தாசில்தார் ரமேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் அந்த பணிகளை உடனே நிறுத்த தாசில்தார் உத்தரவிட்டார். இதையடுத்து தேங்காய் சிரட்டைகள் எரிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்த தேங்காய் சிரட்டை குவியல்களை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அப்புறப்படுத்தி அழித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்