பந்தலூரில் கடை மீது கல்வீச்சு: இந்து முன்னணியை சேர்ந்த 3 பேர் கைது
பந்தலூரில் கடை மீது கல்வீசியதாக இந்து முன்னணியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பந்தலூர்
பந்தலூரில் கடை மீது கல்வீசியதாக இந்து முன்னணியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடை மீது கல் வீச்சு
இந்துக்கள் குறித்து சர்ச்சையில் வகையில் பேசியதாக ஆர்.ராசா எம்.பியை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது பந்தலூரில் அடைக்கப்பட்டு இருந்த கடையை திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் அறிவுறுத்தினர். அப்போது அங்கு வந்த இந்து அமைப்பினருக்கும், வியாபாரிகள் சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பந்தலூர் பஜாரில் திறக்கப்பட்ட ஒரு கடை மீது கல் வீசப்பட்டது. அதனால் கடையின் கண்ணாடிகள் நொறுங்கின.
3 பேர் கைது
இதனால் தி.மு.க.வினரும், வியாபாரிகள் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், பந்தலூர் தாசில்தார் நடேஷன் தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் ஆகியோர் அங்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடை மீது கல்வீசியவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த போது பந்தலூர் மேட்டுகுடியை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முரளி (வயது 30), ராஜா (24), சூர்யா (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.