திருட்டு போன கார் ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் மீட்பு

கே.வி.குப்பம் அருகே திருட்டு போன கார், ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் மீட்கப்பட்டது.

Update: 2023-08-18 18:26 GMT

கே.வி.குப்பம் அருகே பழையகிருஷ்ணாபும் ஊராட்சி காவாக்கரையில் நேற்று முன்தினம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் நேற்று காலையில் பார்த்தபோது திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் கார் உரிமையாளர் ரவி புகார் அளித்தார். மேலும் காரில் ஜி.பி.ஆர்.எஸ். என்ற இருப்பிடத்தை் காட்டும் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. இதன் மூலம் கார் உரிமையாளரின் மகன் ஜெயக்குமார், அவரின் நண்பர்கள் திருமலை, ராஜி, ஞானப்பிரகாசம், நவீன், பார்த்திபன் ஆகியோர் வேறு ஒரு வாகனம் மூலம் ஜி.பி.ஆர்.எஸ். காட்டிய சிக்னலை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த கார் திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் ஒரு கரும்பு தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

அப்போது, காரை கடத்திச் சென்ற வாலிபர் அங்கிருந்து தப்ப முயன்றார். போலீசார் உதவியுடன் காரை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட நபரைப்பிடித்து கே.வி.குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்