கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம்
கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தலைமை மருத்துவர் வெற்றி வடிவேலன், பிரசாந்த் ஆகியோர் தலைமையிலான குழுவினர் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, தாது உப்பு கலவை அளித்தல் போன்ற பல்வேறு சிகிச்சைகளை அளித்தனர்.