அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
கலசபாக்கம் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.
கலசபாக்கம்
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் கலசபாக்கம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் கலசபாக்கம் ஒன்றியத்தில் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பின்னர் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் பேசுகையில், தங்கள் பகுதிகளில் உள்ள கோரிக்கைகளை மனுவாக தாருங்கள்.
மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கலசபாக்கம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.