தக்காளி விலை உயர்வை குறைக்க நடவடிக்கை

தக்காளி விலை உயர்வை குறைக்க நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேட்டி

Update: 2023-07-01 18:45 GMT

பரங்கிப்பேட்டை

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இயற்கை மாற்றங்களால் தக்காளியின் விலை உயர்ந்து இருக்கிறது. விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தக்காளி விளைச்சல் அதிகமாகும் போது வயலில் கொட்டும் சம்பவங்களும் நடந்துள்ளன. தற்போது வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி வந்து கொண்டிருக்கிறது. அதனால் தக்காளி விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ஆற்றுப்பகுதியில் உள்ள பழைய சுற்றுலா விடுதி அறைகளை இடித்து விட்டு முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று கூடுதல் நிலத்தை பெற்று புதிய விடுதி அறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பிச்சாவரத்தில் நீர்நிலை சார்ந்துள்ள விளையாட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவா் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்