ெரயில்வே பாலம் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
வாணியம்பாடி-நியூ டவுன் ெரயில்வே பாலம் கட்டும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடு்த்தனர்.
வாணியம்பாடி-நியூ டவுன் ெரயில்வே பாலம் கட்டும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடு்த்தனர்.
நகரமன்ற கூட்டம்
வாணியம்பாடி நகரமன்ற கூட்டம் அதன் தலைவர் உமா சிவாஜி கணேசன் தலைமையில் நகர மன்ற அரங்கத்தில் நடைபெற்றது. துணைத் தலைவர் கயாஸ் அஹமத், ஆணையாளர் மாரிசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சங்கர் வரவேற்றார்.
கூட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் உள்பட 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் மன்ற உறுப்பினர் பி.முஹம்மது அனீஸ் பேசுகையில், ஆமினாபாத் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக மண் சாலையாக இருந்தது, தற்சமயம் நகராட்சி சார்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் குடிநீர் பைப் அமைத்து தந்த நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார். நகராட்சி பகுதியில் சாலைகள் பழுதாகி உள்ளது அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க என்றார்.
பாலம் பணியை தொடங்க வேண்டும்
ஏ.நாசீர்கான் பேசுகையில், வாணியம்பாடி நகரின் முக்கிய பிரச்சினையான நியூடவுன் ரெயில்வே பாலம் பணிகளை தொடங்க நகராட்சி சார்பில் செய்ய வேண்டிய பணிகளை விரைந்து செய்து பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த தலைவர் உமா சிவாஜி கணேசன் பேசுகையில், உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் வி.எஸ்.சாரதி குமார், சித்ரா, மா.பா.சாரதி, பஷீர் அஹமத், பிரகாஷ், ஆஷாபிரியா குபேந்திரன், ஹாஜியார் ஜகீர் அகமது, கலைச்செல்வன் உட்பட பலர்கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி மேலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.