ஓடும் ரெயிலில் பெண்ணிடம் பணம் திருட்டு

ஒடும் ரெயிலில் பெண்ணிடம் பணம் திருட்டு போனது.

Update: 2022-08-25 19:15 GMT

சேலத்தைச் சேர்ந்தவர் பர்சானா (வயது 46). இவர் ஓசூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சேலத்திற்கு புறப்பட்டார். அந்த ரெயில் தர்மபுரி அருகே வந்தபோது அவர் வைத்திருந்த பை மாயமானது. அதில் ரூ.94 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பர்சானா இது பற்றி தர்மபுரி ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் ரெயிலில் பெண்ணிடம் பணம் திருடியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்