முட்டை லோடுடன் லாரியை திருடிச்சென்றுநடுரோட்டில் கவிழ்த்த மர்ம நபர் யார்?

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து முட்டை லோடுடன் லாரியை திருடிச் சென்று நடுேராட்டில் கவிழ்த்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-12-27 19:22 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,


ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து முட்டை லோடுடன் லாரியை திருடிச் சென்று நடுேராட்டில் கவிழ்த்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாரி திருட்டு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 40). இவர் வெளியூர்களிலிருந்து முட்டை வாங்கி வந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பல்வேறு கடைகளுக்கு தனது மினி லாரி மூலம் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். அந்த லாரியை டிரைவர் சுந்தர்ராஜ் (28) என்பவர் ஓட்டினார்.

நேற்று காலை அவர் பஸ் நிலையம் அருகே மினி லாரியை நிறுத்திவிட்டு, சில கடைகளுக்கு முட்டை வினிேயாகம் செய்து கொண்டிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது மினி லாரியை காணவில்லை.

தனிப்படை அமைப்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தர்ராஜன், லாரி உரிமையாளர் அர்ச்சுனனுக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து லாரியை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடத்திச் செல்லப்பட்ட லாரி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாமிநத்தம் என்ற பகுதியில் ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதும், அதில் லாரியில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள முட்டைகள் உடைந்து நாசமானதும் தெரியவந்தது.

வலைவீச்சு

லாரியை திருடி சென்றவர், விபத்துக்குள்ளான லாரியை சரிசெய்து மீண்டும் பல்வேறு பகுதி வழியாக கொண்டு சென்று பேரையூர் பகுதியில் நிறுத்தி விட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.

பேரையூரில் இருந்து லாரியை மீட்டு கொண்டு வருவதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். முட்டை லோடுடன் லாரியை திருடி சென்று நடுரோட்டில் கவிழ்த்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்