தேவதானப்பட்டி அருகே 3 பசுக்கள் திருட்டு

தேவதானப்பட்டி அருகே 3 பசுக்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2022-10-22 16:47 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் செல்லச்சாமி (வயது 45). நேற்று இரவு இவர், தனக்கு சொந்தமான 3 பசுமாடுகளை வீட்டின் அருகில் உள்ள தொழுவத்தில் கட்டி வைத்திருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, தொழுவத்தில் இருந்த 3 பசுமாடுகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

உடனே அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து மாடுகள் திருடுபோனது குறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் செல்லச்சாமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்