கூலித்தொழிலாளி வீட்டில் 2½ பவுன் திருட்டு; வாலிபர் கைது
கூலித்தொழிலாளி வீட்டில் 2½ பவுன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி தாராநல்லூர் கீரக் கடை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது 1½ பவுன் தங்க சங்கிலி, ½ பவுன் மோதிரம், 2 கிராம் மோதிரம் மற்றும் ஒரு ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை திருட்டு போயிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டதிருச்சி வடக்கு தாராநல்லூர் சூரஞ்சேரியை சேர்ந்த சிவக்குமார் என்கிற சூரி சிவாவை (24) கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட நகைகளை மீட்டனர்.