கூடலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆலோசனை கூட்டம்
கூடலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூடலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் அக்கிம் ராஜா முன்னிலை வகித்தார், நகர துணைத்தலைவர் கான் அப்துல் கபார்கான் வரவேற்றார். கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தற்போது உள்ள கள சூழ்நிலை குறித்து ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தலைவர் அஜ்மீர்கான் பேசினார். முடிவில் நகர செயலாளர் காதர் மைதீன் நன்றி கூறினார்.