கோத்தகிரியில் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி நூதன போராட்டம்
கோத்தகிரியில் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோத்தகிரி,
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவரை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களது வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் கோத்தகிரி நகர செயலாளர் முகமது யாகூப் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் வாயில் கருப்பு துணியை கட்டி, மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை உடையில் ஒட்டிக்கொண்டு ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து பஸ் நிலையம், மார்க்கெட் உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.