ஆலயங்களில் சிலுவைபாதை சிறப்பு பிரார்த்தனை

குமரி மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் புனித வெள்ளியையொட்டி நேற்று சிலுவை பாதை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-04-07 20:04 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் புனித வெள்ளியையொட்டி நேற்று சிலுவை பாதை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

புனித வெள்ளி

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, சிலுவை பாதை வழிபாடு போன்றவை நடைபெறும். இந்த ஆண்டு புனித வெள்ளி நேற்று அனுசரிக்கப்பட்டது.

அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சில ஆலயங்களில் காலை முதல் மதியம் வரை புனித வெள்ளி வழிபாடு மற்றும் நற்கருணை ஆராதனை, மாலையில் சிலுவை பாதை வழிபாடும் நடந்தது.

கோட்டார் சவேரியார் ஆலயம்

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நேற்று மாலை திருச்சிலுவை ஆராதனை, சிலுவை பாதை போன்றவை நடந்தது. இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கினார். இரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அலோசியஸ் பென்சிகர், செயலாளர் இம்மானுவேல், கோட்டார் மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் கிளாரிஸ், பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன் மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் சி.எஸ்.ஐ. ஹோம் சர்ச்சில் புனித வெள்ளியை முன்னிட்டு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

நள்ளிரவு சிறப்பு திருப்பலி

ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்