அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள்

மேக்களூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2023-03-31 14:45 GMT

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறந்த முறையில் தேர்வுகளை எழுதும் பொருட்டு தன்னார்வலரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சி.ஆர். காளிமுத்து தனது சொந்த செலவில் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், பென்சில் போன்ற எழுது பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி தலைமையில் வழங்கினார்.

மேலும் தேர்வினை பள்ளிக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த முறையில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியைகள் உமா, சித்ரா, பட்டதாரி ஆசிரியர்கள் விஸ்வநாதன், விஜயகுமார், பிரமுகர்கள் ராமச்சந்திரன், பாலையா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்