அரசு போக்குவரத்து கழகங்கள் தனியார்மயமாக்கப்படாது - அமைச்சர் சிவசங்கர்

அரசு போக்குவரத்து கழகங்கள் தனியார்மயமாக்கப்படாது என்று அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளர்.

Update: 2023-03-11 18:50 GMT

கோப்புப்படம்

சென்னை,

சென்னை மாநகர் போக்குவரத்துக்கழக தலைமையகத்தில் தொழிற்சங்கங்களுடன் கலந்தாய்வு கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.கூட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மற்றும் போக்குவரத்து கழக உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:-

போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. போக்குவரத்து கழக பணியாளர்கள் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை. உலக வங்கியின் கருத்துருப்படி மின்சார பஸ்களை கொள்முதல் செய்து ஒப்பந்த அடிப்படையில் மாநகர் போக்குவரத்து கழக வழித்தடங்களில் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழு பரிந்துரைக்கு மட்டுமே டெண்டர் கோரப்பட்டுள்ளது.

500 புதிய மின்சார பஸ்களில், நகரில் பயன்படுத்தப்படும் பஸ்களில் (சாதாரண கட்டண பஸ்) பெண்களுக்கான கட்டணமில்லா பயணம் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்படும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்