மாநில அளவிலான குடோ போட்டி திருச்சி அணி சாம்பியன்

மாநில அளவிலான குடோ போட்டி திருச்சி அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

Update: 2022-10-03 19:54 GMT

4-வது மாநில அளவிலான குடோ கராத்தே போட்டி திருப்பூரில் 2 நாட்கள் நடந்தது. இதில் திருச்சி, நாமக்கல், சென்னை, கோவை, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் பயிற்சியாளர் கந்தமூர்த்தி தலைமையில் திருச்சி அணி கலந்து கொண்டது. போட்டிகளின் முடிவில் திருச்சி அணியினர் 15 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள் வருகிற 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சூரத்தில் நடைபெற உள்ள தேசிய குடோ போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்று திருச்சி திரும்பிய வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சக வீரர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்