திருவாரூர் மாவட்ட அணி வீரர்களை வழியனுப்பும் விழா
திருவாரூர் மாவட்ட அணி வீரர்களை வழியனுப்பும் விழா நடந்தது.
தமிழ்நாடு சீனியர் 70-வது ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ள சீனியர் ஆண்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு போட்டி வடுவூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தேர்வு பெற்ற திருவாரூர் மாவட்ட வீரர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதன் நிறைவு விழா மற்றும் வீரர்களுக்கு சீருடை வழங்கி, மாநில அளவிலான போட்டிக்கு வழியனுப்பும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கபடி கழக செயலாளர் ராசராசேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கபடி கழக துணைத்தலைவர் பொன்.கோவிந்தராஜன், வடுவூர் விளையாட்டு அகாடமி இணை செயலாளர் குழந்தைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டும், திருவாரூர் மாவட்ட கபடி கழக பொருளாளருமான கணேசமூர்த்தி ஆகியோர் சீருடைகளை வழங்கினர். அணி பயிற்சியாளர் ராஜகுரு, அணி மேலாளரும், மாவட்ட கபடி கழக இணை செயலாளருமான வேலுமணி மற்றும் வீரர்கள் மாநில போட்டியில் கலந்து கொள்ள வழியனுப்பப்பி வைக்கப்பட்டனர்.