மாநில அளவிலான கபடி போட்டி
ஆரியநாட்டு தெரு மீனவ கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது.
நாகை ஆரிய நாட்டுதெரு மீனவ கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் திருநெல்வேலி, சென்னை, சேலம், கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் சுற்று போட்டியில் நாகூர் அணியும், செருதூர் அணியும் மோதின. இந்த போட்டியில் செருதூர் அணி வெற்றி பெற்றது. இதேபோல் கீச்சாங்குப்பம் அணியும், சின்னங்குடி அணியும் மோதிக்கொண்ட போட்டியில் சின்னங்குடி அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது.