மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி; எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

விளாத்திகுளம் அருகே மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-28 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் "லியா கைப்பந்து கழகம்" சார்பில் நடத்தப்பட்ட 18-ம் ஆண்டு மாநில அளவிலான பெண்களுக்கான கைப்பந்து போட்டி நடந்தது. போட்டியில், சென்னை, கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த கைப்பந்து அணியினர் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கைப்பந்து வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் கூறி போட்டியை தொடங்கி வைத்தார். கனரா வங்கி 5 அடி சுழற்கோப்பையை கைப்பற்ற விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டியில் சென்னை, மதுரை, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த அணியினர் அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்