மாநில அளவிலான கால்பந்து போட்டி: கோவை, சென்னை அணிகள் காலிறுதிக்கு தகுதி

கோத்தகிரியில் நடைபெற்றும் வரும் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் கோவை, சென்னைகள் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

Update: 2022-06-02 15:12 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் நடைபெற்றும் வரும் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் கோவை, சென்னைகள் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

கால்பந்து போட்டி

நீலகிரி கால்பந்து கழகத்தின் சார்பில் நடத்தப்படும் மாநில அளவிலான பொன்விழா கால்பந்து போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நீலகிரி, தேனி, திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை, மதுரை, ஈரோடு, திண்டுக்கல், சென்னை, கோவை, சேலம், வேலூர், தஞ்சாவூர், காஞ்சீபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட கால்பந்து கழகங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

இந்த போட்டியின் ஏ பிரிவு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய நீலகிரி எல்லோ மற்றும் திருவள்ளூர் அணிகள் ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து நேற்று முதல் பி பிரிவு போட்டிகள் தொடங்கின. இதன் இரு பகுதியாகநடைப்பெற்ற முதல் போட்டியில் சென்னை மற்றும் சேலம் அணிகள் பங்கேற்று விளையாடின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 4-0 என்கிற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

கோவை அணி வெற்றி

இதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு நடந்த 2-வது போட்டியில் கோவை மற்றும் வேலூர் மாவட்ட அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் ஆட்டத்தின் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய கோவை அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிப்பெற்றது.நாக் -அவுட் போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை மற்றும் கோவை அணிகள் நாளை நடைபெறவுள்ள காலிறுதி போட்டியில் விளையாடுகின்றன.

3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு தஞ்சாவூர் மற்றும் காஞ்சீபுரம் அணிகள் பங்கேற்று விளையாடும் போட்டியும், மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை மற்றும் நீலகிரி கிரீன் அணிகளுக்கிடையே போட்டியும் நடைபெறுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்