மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

மயிலாடுதுறையில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது

Update: 2023-08-26 18:45 GMT

தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 14-வது மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கலைஞர் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் மயிலாடுதுறையில் தொடங்கியது. மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் மாநில அளவில் சென்னை, திருவள்ளூர், சேலம், மயிலாடுதுறை உள்பட 8 மண்டல மாவட்ட அணிகள் பங்கேற்றன. முதலில் மயிலாடுதுறை மற்றும் சேலம் அணிகளுக்கான முதல் போட்டியினை மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் கழகத்தினுடைய நிர்வாகியுமான ஜெகவீரபாண்டியன் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார். அகில இந்திய பொதுச்செயலாளர் சுனில் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தி பேசினார். மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகள் கிரிக்கெட் சங்க தலைவர் அப்பர்சுந்தரம் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்க பொறுப்பாளர்கள் கலைச்செழியன், சேலம் சண்முகராஜ், திருவள்ளூர் வீரராகவன், சென்னை வீரரெட்டி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மூவை.பாரதிதாசன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் மூவலூர் அருண் பாபு, நடுவர்கள் சர்வீஸ் அனீஸ் உள்பட பலர் பங்கேற்றனர். இந்தப் போட்டிகள் தொடர்ந்து 2 நாட்களுக்கு நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்