மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி
சி.ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி பொள்ளாச்சியில் நடைபெற்றது.
பொள்ளாச்சி
சி.ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி பொள்ளாச்சியில் நடைபெற்றது.
கிரிக்கெட் போட்டி
சி.ஐ.எஸ்.சி.இ.(இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை) பள்ளிகளுக்கு இடையே 17 வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி, பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று தொடங்கியது. போட்டியில் கோவை, நீலகிரி, சென்னை, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 13 பள்ளி அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன.
லீக் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. பொள்ளாச்சியில் பகுதியில் மொத்தம் 3 மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று வேலூர்-திருப்பூர் அவினாசி பள்ளி அணிகள் மோதிய போட்டியில் முதலில் ஆடிய திருப்பூர் அணி 12 ஓவர்களில் 54 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய வேலூர் அணி 8 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தேசிய போட்டிக்கு தகுதி
மற்றொரு லீக் ஆட்டத்தில் வேலூர்-நீலகிரி அணிகள் விளையாடின. இதில் முதலில் ஆடிய நீலகிரி அணி 12 ஓவர்களில் 172 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய வேலூர் அணி 12 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இன்று (செவ்வாய்கிழமை) அரையிறுதி மற்றும் அதை தொடர்ந்து இறுதி போட்டிகள் நடைபெறுகிறது. மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணி, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.