வாரச்சந்தை தொடக்கம்
காட்டுக்காநல்லூர் கிராமத்தில் வாரச்சந்தை தொடங்கப்பட்டது.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலத்தை அடுத்த காட்டுக்காநல்லூர் கிராமத்தை சுற்றி உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடும் காய்கறிகள், பழவகைகளை தினமும் டவுன் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் வேலூர் மார்க்ெகட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமை கண்ணமங்கலம் ஈஸ்வரன் கோவில் தெருவில் நடைபெறும் வாரச்சந்தைக்கு தாங்களே எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் காட்டுக்காநல்லூர் பகுதியில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் காய்கறிகள், பழவகைகளை விற்பனை செய்யும் வகையில் ஊராட்சி மன்றம் சார்பில் மந்தைவெளி பகுதியில் காய்கறி வாரச்சந்தை தொடங்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரேணு, துணைத் தலைவர் கவிதாசுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.