நெல்அறுவடை பணிகள் தொடக்கம்
உப்பிலியபுரம் பகுதியில் நெல்அறுவடை பணிகள் தொடங்கியது.
உப்பிலியபுரம், மே.29-
உப்பிலியபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான முருங்கப்பட்டி, சோபனபுரம், எரகுடி, பச்சபெருமாள்பட்டி, பி.மேட்டூர், கோட்டப்பாளையம், வைரிசெட்டிப்பாளையம், புளியஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் முதல்போக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏ.டி.டி. 43, கோ 51, ஏ.டி.டி.ஆர். 45 ஆகிய சன்ன ரக நெல் வகைகளும், ஏ.எஸ்.டி. 16, டி.பி.எஸ். 5 ஆகிய மோட்டா ரக நெல் வகைகளும் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது இந்த நெல் வகைகள் விளைச்சலுக்கு வந்து அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை தொடங்கப்பட்டதையொட்டி. இப்பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் மையங்களை திறக்க மாவட்ட நிர்வாகத்தினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.